search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் பாதிப்பு"

    • புயல் காரணமாக கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாவை புயல் தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி புயல் தாக்கி உள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகிறார்கள். சாலைகளில் பலஅடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி உள்ளன. கடலோர பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிக்கின்றனர். 

    • கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சு ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
    • நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்கால பருவத்தின்போது, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் புயலானது பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

    கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சும் ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். கலிபோர்னியாவில் கார்மெல் மற்றும் பெப்பிள் பீச் ஆகியவை மிக பெரிய சுற்றுலா தலங்களாக அறியப்படுகின்றன.

    இவற்றின் அருகேயுள்ள சாலினாஸ் ஆற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பேராபத்து ஏற்பட கூடும். அதனால், சுற்றுலாவாசிகளுக்கு தடை விதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டது.

    இந்த ஆற்றில் நேற்று அபாய அளவை கடந்து வெள்ளம் ஓடியது. இதனை தொடர்ந்து, அந்த ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 24 ஆயிரம் பேரை அதிகாரிகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

    புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. கட்டிடங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால், குடியிருப்பில் உள்ள மக்கள் பாதுகாப்பு தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் மின் இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் மின் வினியோகம் பாதித்து அவதிப்படுகின்றனர்.

    இந்நிலையில், இன்னும் 2 புயல்கள் கூடுதலாக கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதியை பாதிக்ககூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

    எனினும், கடந்த 2 வாரங்களில் 7 பருவகால புயல்கள் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன. நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது என பொதுமக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    மொசாம்பிக்கில் எல்டாய் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட இந்தியா தனது 3 கடற்படை கப்பல்களை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. #Mozambiquecyclone #CycloneIdai
    புதுடெல்லி:

    கடந்த 15-ந்தேதி, ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளை ‘எல்டாய்’ புயல் தாக்கியது. இதனால், ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன.

    மொசாம்பிக் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா தனது 3 கடற்படை கப்பல்களை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பி வைத்துள் ளது. அக்கப்பல்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 200 பேரை மீட்டுள்ளன. இந்திய கடற்படை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண பொருட்களுடன் மற்றொரு கப்பலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 
    மொசம்பிக் நாட்டை துவம்சம் செய்த இடாய் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் மேலும் 250 மக்கள் பலியாகினர். #Mozambiquecyclone #CycloneIdai
    பெய்ரா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த வாரம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில்  ‘இடாட் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன.

    அருகாமையில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியை இந்த கோரப்புயல் பதம் பார்த்தது.

    இந்த புயலின் தாக்கத்தால் மொசாம்பிக் நாட்டின் சில பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

    புயலை தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஏற்கனவே வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மொசாம்பிக் நாட்டில்  மட்டும் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

    பல பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் மெல்ல வடிந்துவரும் நிலையில்  ‘இடாட் புயல்’ மற்றும் மழை, வெள்ளம் பாதிப்புக்கு மொசம்பிக் நாட்டில் மட்டும் 417 உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. அருகாமையில் இருக்கும் கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் சுமார் 250 பேர் பலியானதாகவும் ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். #Mozambiquecyclone #CycloneIdai 
    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    நெற்களஞ்சியமாக விளங்கிய டெல்டா மாவட்டங்கள் கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலில் உருகுலைந்து போய் விட்டன.

    லட்சக்கணக்கான மரங்களையும், மின் கம்பங்களையும் சாய்த்த கஜா புயல் விவசாயிகள் வாழ்வதாரமாக விளங்கிய பயிர்களையும விட்டு வைக்கவில்லை. தென்னையை பிள்ளையை போல் வளர்த்த விவசாயிகள் அவைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சியை கண்டு கண்ணீர் வடித்த வண்ணம் உள்ளனர்.

    தங்கள் முன்னோர் உழைப்பில் உருவான தென்னைகளும், தங்களால் வளர்க்கப்பட்ட தென்னைகளும் முறிந்தும் வீழ்ந்தும் கிடப்பது அவர்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.

    வாழைகள், கரும்புகள் அடியோடு வீழ்ந்து விட்டதால் உழவர் பண்டிகையாம் தைபொங்கலை வரவேற்க தயாராக இருந்த விவசாயிகளுக்கு பொங்கலுக்கு நெல்லை மட்டுமே நம்பி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து அடுத்தடுத்து பெய்த கனமழை நெற்பயிர்களையும் நீரில் மூழ்கடித்து விட்டது.

    வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர் அருகில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி அருகில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மின் வினியோகம் வழங்கபடவில்லை. இதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யம், கொள்ளிடம், தலைஞாயிறு, தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களிலும் முறிந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு வழங்க மின் வாரியத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுக்கும் போது நல்ல நிலையில் நிற்கும் சில பழைய மின்கம்பங்கள் முறிந்து விடுகின்றன. இதனால் அப்பணியை மீண்டும் செய்யும் அவல நிலை ஏற்படுகிறது. புயலில் இருந்து மீளாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க இன்னும் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.

    பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் பகலில் தங்களது இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

    வேதாரண்யம், தரங்கம்பாடி, சேதுபாவா சத்திரம் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் படகுகள் சேதமாகி விட்டதால் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முழு வீச்சில் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள், புயல் பாதிப்பு பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர் . இருந்தபோதிலும் கஜா புயலில் இழந்த வாழ்வை மீண்டும் பெற முடியுமா? என்ற அச்சம் அகலாமல் டெல்டா மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் பிரச்சினைகளை எளிதில் கையாள முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். #sagayam #tngovt #honest

    கோவை:

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நான் பொறுப்பில் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டு வருகிறது என கூற இயலாது.

    பொன் மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக, நான் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அரசு துறையில் இருக்கிற காரணத்தால் எதுவும் கூற இயலாது.

    எங்களை போன்ற அலுவலர்களை எங்கே பணியமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் அரசுக்கு உள்ளது. எந்த பணியிடம் அளித்தாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் இந்த பிரச்சினையை எளிதில் கையாள முடியும் என்றார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது பதவியை தொடர உயர்நீதிமன்றத்தை நாட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் நாம் அரசிடம் தான் தீர்வுக்காக எதிர்பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்றார். #sagayam #tngovt  #honest

    தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். #BanwarilalPurohit #GajaCyclone
    நாகை:

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றவண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.

    இந்நிலையில், புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட முடிவு செய்த ஆளுநர் பன்வாரிலால் நேற்று இரவு சென்னையில் இருந்து நாகைக்கு புறப்பட்டார். இன்று காலை நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



    பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார். பின்னர் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit #GajaCyclone
    புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர். #GajaCyclone #Gaja #Vijayabaskar
    தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘கஜா’ புயல் கரை கடந்ததையொட்டி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் இருந்தது.



    புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. வெளிமாவட்டங்களை சேர்ந்த 500 பணியாளர்களை கொண்டு சீரமைப்பு மற்றும் மின்சார பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #Gaja #Vijayabaskar
    ×